முகப்பு எங்களைப் பற்றி
Menu

எங்களைப் பற்றி

ஹீரோ மோடோகார்ப் லிமிடெட் (முன்பு ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் லிமிடெட் என்று அறியப்பட்டது) உலகளவில் மிக அதிக எண்ணிக்கையில் டூ-வீலர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் ஓர் இந்திய நிறுவனம்.

2001 ஆண்டில், இந்தியாவில் டூ-வீலர்களைத் தயாரிக்கும் மிகப் பெரிய நிறுவனம் என்ற அரிய பெருமையை நிறுவனம் பெற்றிருக்கிறது, மேலும் ஒரு காலண்டர் வருடத்தில் யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில் 'World No.1' என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. ஹீரோ மோடோகார்ப் லிமிடெட் இந்த தலைமை இடத்தை இன்றளவும் காப்பாற்றி வருகிறது.

தொலைநோக்கு

ஹீரோ ஹோண்டா வரலாறு ஒரு எளிய தொலை நோக்குடன் ஆரம்பமானது - ஒரு மொபைல், இந்தியாவை ஆற்றலுள்ள நாடாக மாற்றுகிறது, இரு சக்கர வாகனங்கள் உதவியுடன். நிறுவனத்தின் புதிய அடையாளம், ஹீரோ மோடோகார்ப் லிமிடெட், உலக தரமுள்ள போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் உள்ளார்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது, இப் புதிய தொலை நோக்கு உலகச் சந்தைகளிலும் தன் கால் தடத்தைப் பதிக்க முனைந்துள்ளது.

இலக்கு

உலகளாவிய தொழில் நிறுவனமாக உருவாகும் இலக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹீரோ மோடோகார்ப், வாடிக்கையாளர்களின் போக்குவரத்து சாதன விருப்பங்களை நிறைவேற்றுவதுடன் தொழில்நுட்பத்தில், நவ நாகரீக தோற்றத்தில் மற்றும் தரத்தில் புதிய மட்டக்குறிகளை நிர்ணயித்து, தங்கள் வாடிக்கையாளர்களையே பிராண்டு ஆதரவாளர்களாக மாற்ற உறுதி கொண்டுள்ளது. தங்கள் பணியாளர்கள் அவர்களுடைய முழுமையான ஆற்றல்களை வெளிப்படுத்தி உழைக்க ஏதுவான சாதகமான சூழலை நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்கும். தங்கள் கூட்டாளிகளுடன் நீடித்து பயனளிக்கும் உறவுமுறையைப் பேணி, அவர்களுக்கு நற்பயன்கள் உருவாக்கிக் கொடுப்பதில் நிறுவனம் முனைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

முக்கிய விழுமங்கள்

நாணயம்

அறநெறி மற்றும் ஒழுக்க கோட்பாடுகள்

மனித நேயம்

செருக்கின்றி, திறந்த மனதுடன் புதியனவைகளையும், புதிய படைப்புகளையும், படிப்பினைகளையும் கற்றுக் கொள்ளுதல்

குழுப்பணியில் மேம்பட்ட திறனடைதல்

எங்கள் செயல்பாடுகளில், தயாரிப்புப் பொருள்களில் மற்றும் சேவைகளில் முழுமை பெற அயராது உழைத்தல்

விரைவு

எங்கள் செயல்பாடுகளில் ஏற்புத்தன்மை; நிறைவேற்றும் ஆற்றல், திட்டங்களைச் செயல்படுத்தும் திறன்

பணிவன்பு

மூத்தவர்கள், முதியவர்கள்; பயனளிக்கும் பொருள்கள், ஆன்மீகம் மற்றும் அறிவாற்றலுள்ளவர்கள்; அமைப்புகள், நடைமுறைகள் மற்றும் விழுமியங்கள்

திட்டம்

சிறந்த திடமான புராடெக்ட் தொகுப்புகளை பல பிரிவுகளில் உருவாக்குதல், உலகளவில் வளர்ச்சி வாய்ப்புகளை அடையாளம் காணுதல், செயல்திறனை தொடர்ந்து மேம்படுத்துதல், வாடிக்கையாளர் எண்ணிக்கையை முனைந்து அதிகரித்தல், பிராண்டு வளர்ச்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து முதலீடு செய்தல் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் மகிழ்ச்சியைப் பெருக்குதல் ஆகிய முக்கிய திட்டங்களை ஹீரோ மோடோகார்ப் வகுத்து செயல்படுத்தும்.

பிராண்டு

புதிய ஹீரோ மேன்மேலும் வளர்ந்து உலக சந்தைகளிலும் பிரகாசமாக ஒளிரும். நிறுவனத்தின் புதிய அடையாளம் "ஹீரோ மோடோகார்ப் லிமிடெட்" போக்குவரத்து சாதனங்களில், தொழில்நுட்பத்தில் மற்றும் உலகளவில் தடம் பதிக்கும் முயற்சிகளில் முனைப்புடன் செயல்படும் என்பதை இது உண்மையில் பிரதிபலிக்கிறது. ஒரு புதிய பிராண்டு அடையாளத்தை உருவாக்கி வளர்ப்பது நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகளில் மையமாக இருக்கும், அதனால் ஸ்போர்ட்ஸ், என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நில மட்ட இயக்கங்களில் ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.

உற்பத்தி

ஹீரோ மோடோகார்ப் டூ வீலர்கள் 4 உலகத் தர மட்டக்குறி இணக்கத்துடன் இயங்கும் உற்பத்தி தொழிலகங்களில் தயாரிக்கப்படுகின்றன. இவைகளில் இரண்டு, வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள குர்காம் மற்றும் தருஹிரா நகரங்களில் உள்ளன. மூன்றாவது தொழிற்சாலை மலைகள் சூழ்ந்த உத்தர்காண்ட் மாநில ஹரிதுவாரில் உள்ளது; சமீபத்திய அதி நவீன நான்காவது தொழிற்சாலை ராஜஸ்தான் மாநிலத்தின் நீம்ரான ஹீரோ கார்டனில் உள்ளது.

வினியோகம்

வளர்ந்து கொண்டிருக்கும் சந்தைகள் மற்றும் புதிய பகுதிகளில் மிக அதிக மக்களை கவர்ந்திழுக்கும் உள்ளார்ந்த ஆற்றல் தான் நிறுவனத்தின் டூ வீலர் வாகனங்கள் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஹீரோ மோடோகார்ப்-ன் மிகப் பரவலான விற்பனை மற்றும் சேவை வலைப்பின்னல் இன்று 6000 க்கும் அதிக வாடிக்கையாளர் தொடு மையங்களாக விரிந்திருக்கிறது. இவைகளில் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்புகள், சர்வீஸ் & ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள் மற்றும் நாடு முழுவதும் டீலர்- நிருவியிருக்கும் அவுட்லெட்டுகள் ஆகியவை அடங்கும்.

  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018