Menu

கேள்வி பதில்கள்

ஸ்பார்க் பிளக் மோசமடைந்தால் என்ன செய்வது?

 இக்னிஷன் அமைப்பில் ஸ்பார்க் பிளக் இன்றியமையாதது. அதிக வோல்டேஜ் கரன்ட்-ஐ அடிக்கடி வெளிப்படுத்து, கம்பஷன் காரணமான அரிப்பு ஏற்படுத்தும் ஆக்ஸிடைசேஷன் ஆகியவற்றால் ஸ்பார்க் பிளக்கின் எலக்டிராடுகள் தேய்மானமடைந்து அவற்றின் இடைவெளி படிப்படியாக அதிகரிக்கும்.
12000 கிமீ பயணித்த பிறகு ஸ்பார்க் பிளக்கை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும், இந்த நிலைமையில் அவை தேய்மான சேதமடைந்திருக்கும். தேய்மானமடைந்த ஸ்பார்க் பிளக்கை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்தால், ஸ்டார்டிங் டிரபிள், மிஸ்ஃபையரிங், பவர் குறைவு, அதிக எரிபொருள் செலவு மற்றும் கழிவு புகை அதிகரித்தல் ஆகியவை ஏற்படும். ஒரு சில அரிதான நிகழ்வுகளில், நடு வழியில் வாகனம் நின்று விடும், அதை மாற்றினால்தான் பயணம் தொடரும் என்ற நிலைமை உருவாகும்.
HGP ஸ்பார்க் பிளக்குகள் உங்கள் ஹீரோ வாகனங்களுக்கு என்று பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன, பிரச்சனை இல்லாமல் நீண்ட காலத்திற்கு அவை உழைக்கும். கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஏர் ஃபில்டரை எப்பொழுது மாற்ற வேண்டும்?

 எஞ்சின் பாகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு உள்நுழையும் காற்றிலிருக்கும் அழுக்குகளையும் தூசுகளையும் ஏர் ஃபில்டர் வடிகட்டுகிறது. நீண்ட கால பயன்பாடு காரணமாக, காலப் போக்கில் தூசுகளாலும் அழுக்குகளாலும் இந்த வடிகட்டி அடைத்துக்கொள்ளும்.
ஹீரோ மோடொகார்ப் வாகனங்களில் மூன்று வெவ்வேறு ஏர் ஃபில்டர்கள் பொருத்தப் பட்டுள்ளன, அவை பாலியூரிதேன் வெட் டைப், டிரை பேப்பர் மற்றும் விஸ்கோஸ் பேப்பர் டைப். பாலியூரிதேன் மற்றும் டிரை பேப்பரை அவ்வப்போது சுத்தம் செய்து வைக்க வேண்டும். பாலியூரிதேன் சேதமடைந்துவிடும் போது அதை மாற்ற வேண்டும், டிரை பேப்பர் வடிகட்டியை ஒவ்வொரு 12000 கிமீ பயணத்திற்குப் பிறகு மாற்ற வேண்டும். விஸ்கோஸ் டைப் வடிகட்டியை சுத்தம் செய்ய தேவையில்லை, 15000 கிமீ பயணத்திற்குப் பிறகு அதை மாற்ற வேண்டியிருக்கும். தூசு நிறைந்த சுற்றுச்சூழலில் வாகனம் பயன்பட்டுக் கொண்டிருக்கும் போது, இவற்றை அடிக்கடி சுத்தம் செய்யவோ அல்லது மாற்றவோ அவசியம் ஏற்படலாம்.
மேலேயுள்ள அட்டவணையைப் பின்பற்றாத போது, எஞ்சின் ஆற்றல் பாதிப்படைந்து, எரிபொருள் சிக்கனம், அகாலத்தில் எஞ்சின் பழுதடைதல் அதனால் அதிக ரிப்பேர் செலவுகள் ஆகியவை நிகழும்.
போலி ஏர் ஃபில்டரைப் பயன்படுத்துவதால், வடிகட்டும் திறன் பாதிப்படையும். HGP யைப் போலவே தோற்றமளிக்கும் பல போலி ஃபில்டர்கள் சந்தையில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன, அவை தரம் குறைந்தவை. இதைப் பயன்படுத்தும் போது காலப் போக்கில் சுருங்கும் அதனால் சீலிங் ஆற்றல் குறைந்து விடும். HGP ஒரிஜினல் ஃபில்டரை மட்டுமே பயன்படுத்தி எஞ்சின் ஆற்றல் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள், அதன் ஆயுளையும் அதிகரியுங்கள். கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஃபூயல் டியூபை மாற்றுவது எப்போது?

 ஃபூயல் டேங்கிலிருந்து கார்புரேட்டருக்கு தொடர்ந்து எரிபொருள் கிடைப்பதற்கு ஃபூயல் டியூப் பயன்படுகிறது.
பொதுவாக, 4 வருடத்திற்கு ஒரு முறை ஃபூயல் டியூபை மாற்றுவது வழக்கம். ஒரு சில விதிவிலக்கான நிகழ்வுகளில், அதாவது 6 மாத காலமாக வாகனம் பயன்பாட்டில் இல்லாத போது, ஃபூயல் டியூபை மாற்றுவது நல்லது.
டியூபில் தொடர்ந்து எரிபொருள் பாய்ந்து கொண்டிருப்பதாலும், குழாயின் உட்புறத்தில் பெட்ரோல் பாய்வு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்பதாலும், குழாய் இணைப்புகளிலிருந்து எரிபொருள் கசிய வாய்ப்பு இருக்கும், எரிபொருள் நாற்றத்திலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.
பல அடுக்குகளுடன் தயாரிக்கப்படும்HGP யின் எரிபொருள் குழாய், இதனுள் இருக்கும் எரிபொருள் கெட்டுப் போவதை தடுத்து பல வகையான சீதோஷ்ன நிலைமைகளையும் சமாளித்து நிற்கும் திறனுள்ளது. எரிபொருள் குழாயின் இரண்டு முனைகளையும் ஒயர் கிளிப் கொண்டு இறுக்கி விட வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

எஞ்சின் ஆயிலை நான் மாற்றவில்லை என்றால் என்ன ஆகிவிடும்?

 எஞ்சின் ஆயிலை மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது அதன் ’மசக்கு’ குணம் மற்றும் “சுத்தப்படுத்தும்” திறன் இரண்டும் குறைந்து விடும், எஞ்சினை அதன் இயல்பு ஆற்றலுடன் பராமரிப்பது கடினமாகிவிடும்.
பொதுவாக, எஞ்சின் ஆயில் மாற்றுவதை ஒவ்வொரு 6000 கிமீ க்குச் செய்ய வேண்டும், ஒவ்வொரு 3000 கிமீ க்கு டாப்-அப் செய்ய வேண்டும்
மேலேயுள்ள அட்டவணையைப் பின்பற்றாத போது, எஞ்சின் செயல்திறன் குறையும், எரிபொருள் சிக்கனம் பாதிப்படையும், எஞ்சின் அதிகம் சூடாவதிலிருந்தும், சப்தம் அதிகரிப்பதிலிருந்தும் இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒரு சில அரிதான நிகழ்வுகளில், இதனால் எஞ்சின் முழுமையாக செயலிழந்துவிடும், ரிப்பேர் செலவுகள் மற்றும் கால தாமதம் மிகவும் அதிகரிக்கும்.
HGP பரிந்துரைக்கும் 10W30 SJ JASO MA எஞ்சின் ஆயிலின் மிகச் சிறந்த குணங்களாவன :-
•சிறப்பான லூப்ரிகேஷன், கிளீனிங், கூலிங் மற்றும் சீலிங் ஆற்றல்கள் ஆகியவை.
•கோல்ட் ஸ்டார்டிங் பிரச்சனை ஏற்படுத்தாது
•டிரெய்ன் காலம் நீண்டிருக்கும்
•சுற்றுச்சூழலுடன் இணக்கம்
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற ஒர்க்‌ஷாப்புடன் தொடர்பு கொள்ளுங்கள்.

HGP பரிந்துரைக்கும் எஞ்சின் ஆயிலை மட்டுமே நான் எதற்கு பயன்படுத்த வேண்டும்?

 சந்தையில் 10W30 கிரேடுகள் பல கிடைத்துக் கொண்டிருக்கின்றன. HGP பரிந்துரைக்கும் 10W30 SJ JASO MA கிரேடு எஞ்சின் ஆயிலின் மிகச் சிறந்த குணங்களாக இருப்பவை :-
•சிறப்பான லூப்ரிகேஷன், கிளீனிங், கூலிங் மற்றும் சீலிங் ஆற்றல்கள்
•கோல்ட் ஸ்டார்டிங் பிரச்சனை ஏற்படுத்தாது
•டிரெய்ன் காலம் நீண்டிருக்கும்
•சுற்றுச்சூழலுடன் இணக்கம்
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற ஒர்க்‌ஷாப்புடன் தொடர்பு கொள்ளுங்கள்.

பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் நான் டிரைவ் செயினை சர்விஸ் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

 சரிவர லூப்ரிகேஷன் செய்து அதை அட்ஜஸ் செய்து வைத்திருப்பதைப் பொருத்து டிரைவ் செயின் ஆயுள் அமையும். இல்லாவிட்டால், அகாலத்தில் தேய்மானம் அதிகரித்திருக்கும். கெட்டுப் போன ஸ்ப்ரொகெட்டுகள் டிரைவ் செயின் தேய்மானத்தை அதிகரித்து வாகனத்தின் செயல்திறனை பாதிக்கும். மோட்டார்சைக்கிள் ஓட்டுவது கடினமாகவும் செயின் சப்தம் அதிகரித்தும் இருக்கும் போது, செயின் ஸ்ப்ரொகெட் கிட்டை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதை தெரிந்து கொள்ளலாம்.
டிரைவ் செயின் மிக மோசமாக தேய்ந்திருக்கும் போது ஓடும் வாகனம் அலைபாயும், ஸ்ப்ரொக்கெட்டிலிருந்து விடுபட்டுவிடும், பாகங்களைச் சேதப்படுத்தும், ஓட்டுனர் பாதுகாப்புக்கு அபாயம் விளையும். எரிபொருள் சிக்கனம் பாதிப்படையும், வாகனம் ஓட்டுவது எளிதாக இருக்காது.
HGP செயின் ஸ்ப்ரொக்கெட் கிட்டுகள் தரம் உயர்ந்த பொருள்களால் செய்யப்பட்டு நீடித்த உழைப்பு ஏற்றவையாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

என் ஸ்கூட்டரின் டிரைவ் பெல்டை எப்பொழுது மாற்ற வேண்டும்?

 ஒரு டிரைவ் பெல்ட் எப்பொழுதும் புல்லியுடன் (இருசுச்சக்கரம்)தொடர்பு கொண்டிருப்பதால், காலப்போக்கில் அதிக தேய்மானமடைந்து மாற்ற வேண்டியிருக்கலாம். கூடவே, இது ரப்பர் தயாரிப்பு ஆதலால் ஓஜோன் மற்றும் உராய்வில் வெளிப்படும் வெப்பத்தால் அது கடினப்படும்.
ஒவ்வொரு 24000 கிமீ ஓட்டத்திற்குப் பிறகு இதை மாற்ற வேண்டும்.
தேய்மானம் அல்லது கெட்டிப்படும் காரணத்தால் இது வழுக்கும், வழுக்குவதால் சக்தி வீணாகும், எரிபொருள் செலவும் அதிகரிக்கும்.
HGP டிரைவ் பெல்ட் திருக்க வலிவூட்டப்பட்ட செயற்கை ரப்பரால், உள்ளடக்கமாக நூலிழைகளால் தயாரிக்கப்பட்டு மிக அதிக உராய்வு, வெப்பம் மற்றும் ஓஜோன் பாதிப்புகளைத் தாங்கி நிற்கும் பலத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கின்றன அதனால் தொல்லையில்லாத ஓட்டம் கொடுக்கும், நீடித்து உழைக்கும்.
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

வழக்கமில்லாத கீச்சொலி கேட்கும் போதும், பிரேக் சரிவர பிடிக்காத போதும் நான் என்ன செய்வது?

சர்வீஸ் காலத்தைக் கடந்த பயன்பாட்டினால் பிரேக் ஷூக்கள்/பேடுகள் திறன் குறைந்திருக்கும், அதனால் உராய்வு பலமும் குறைந்து விடும். பிரேக் ஷூக்கள்/பேடுகள் மிக அதிகம் தேய்ந்திருக்கும் போது அதன் உலோகப் பகுதி டிரம்/டிஸ்குடன் உராய ஆரம்பித்துவிடும் என்பதால் ரிப்பேர் செலவுகள் அதிகரிக்கும், கூடவே முக்கியமாக ரைடர்&rsquo பாதுகாப்பு அபாயங்களும்.
ஆகையால், பிரேக் பிடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல், வழக்கமில்லாத கீச்சொலி ஆகியவை பிரேக் ஷூ, பேட், டிரம் அல்லது டிஸ்க் மாற்றியமைக்க தேவைப்படுகிறது என்பதற்கான அறிகுறிகளாக இருக்கும்.
HGP பிரேக் ஷூக்கள் / பேடுகள் / டிரம் / டிஸ்க் ஆகியவை ஓட்டுனர்’s பாதுகாப்பு கருதி உச்ச தரமுள்ளவையாக தயாரிக்கப்படுகின்றன. ஷூக்கள் / பேடுகளில் ஆஸ்பெஸ்டோஸ் அல்லாத உராய்வுப் பொருள்கள் போன்றவை பயன்படுத்தும் அம்சங்கள் உங்கள் ஹீரோ 2 வீலரைப் பொருத்த வரையில் மிகச் சிறந்த தீர்வாகவும், சுத்தமான மற்றும் பாதுகாப்பான சுழலுக்கு ஏற்றவையாக இருக்கும்.
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

சேதமடைந்த பிறகும் நான் கேம் செயினை மாற்றாவிட்டால் என்ன ஆகும்?

மிக அதிகம் தேய்மானமடைந்திருக்கும் செயின் ஸ்ப்ரொகெட்டுடன் சரிவர பொருந்தாது என்பதால் கேம் செயின் சத்தம் கேட்கும், செயல்திறனும் குறையும். ஒரு சில அரிதான சமயங்களில் செயின் உடைந்து எஞ்சின் பெரிய அளவில் பழுதாகலாம், ஓட்டுனர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகலாம்.
எஞ்சின் ஓடிக் கொண்டிருக்கும் போது, HGP கேம் செயின் கிட் மிக உச்ச அளவு இறுக்கத்தை சமாளித்து தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எஞ்சின் செயல்திறனும் மேம்படும். கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

என் மோட்டார் சைக்கிள் பிக்அப் மந்தமாக உள்ளது. கிளட்ச் ஃபிரிக்‌ஷன் டிஸ்கை நான் மாற்ற வேண்டுமா?

ஃபிரிக்‌ஷன் டிஸ்க் என்பது பொதுவாக அலுமினியம் பிளேட்டில் செய்யப்பட்டு அதன் மீது ஃபிரிக்‌ஷன் பொருள் ஒட்டப்பட்டிருக்கும். உராய்வு விசை மூலமாக எஞ்சினிலிருந்து டிரான்ஸ்மிஷனுக்கு ஆற்றல் பாய கிளட்ச் பிளேட்டுகள் உதவுகின்றன.
CFD (கிளட்ச் ஃபிரிக்‌ஷன் டிஸ்க்) காலப் போக்கில் தேய்மானமடையும் என்பதால் சர்விஸ் வரம்பைக் கடந்திருக்கும் பிளேட்டுகளை மாற்றிவிட வேண்டும். கிஸ் ஸ்டார்ட் போது கிக் வழுக்கல் நிகழ்ந்தால் CFD தேய்மானமடைந்திருப்பதன் முதல் அறிகுறியாகத் தெரிந்து கொள்ளலாம். கிக் ஸ்டார்ட் வாகனங்களுக்கு இது பொருந்தும். ( 100cc & 125cc பிரிவிலிருக்கும் அனைத்து மாடல்களும்).
CFD தேய்மானமடைந்திருக்கும் போது கிளட்ச் வழுக்கும், எஞ்சின் ஓவர்ஹீட்டிங், பவர் மற்றும் ஆக்ஸிலரேஷன் குறைவு மற்றும் எரிபொருள் அதிகம் செலவாகும். கிளட்ச் பிளேட் மற்றும் பிரெஷர் பிளேட் போன்ற பிற பாகங்களையும் சேதப்படுத்தும்.
HGP கிளட்ச் ஃபிரிக்‌ஷன் டிஸ்குகள் உயர் தர ஆஸ்பெஸ்டோஸ் அல்லாத பொருள்களால் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதால் மிக அதிக உராய்வு விசையைத் தாங்கி நின்று வெப்பத்தை மட்டுப்படுத்தும் என்பதுடன் ஆஸ்பெஸ்டோஸ் பொருள் இல்லாததால், காற்று மாசடைவதும் குறைவாக இருக்கும். இதனால், சர்விஸ் செய்யும் கால இடைவெளி மிக அதிகம், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்காது.
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

தாறுமாறான ஐடிலிங் மற்றும் வாகனம் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது கட்டுப்பாடு இழப்பு ஆகியவை சமீப காலத்தில் எனக்கு பிரச்சனையாக உள்ளன. இதை சரிசெய்ய நான் எந்த பாகத்தை மாற்ற வேண்டும்?

நீண்ட காலமாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் திராட்டில் கேபிள் மற்றும் அதன் லிங்கேஜில் தேய்மான சேதம் இருக்கும். சுற்றுச்சூழல் காரணமாக அவை துருபிடித்து வலுவிழந்திருக்கலாம். திராட்டில் செயல்பாடு சிக்கிக் கொள்ளும், வாகனம் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, திராட்டிலை ரிலீஸ் செய்தாலும், திராட்டில் வால்வு சரியாக அதனிடத்தில் பொருந்தாமல் பிரச்சனை செய்யும்.
இது போன்ற தாறுமாறான ஐடிலிங் அதிக எரிபொருளை வீணாக்கும், எஞ்சின் கூடுதலாக வெப்பமடையும். ஒரு சில அரிதான சமயங்களில், கிளட்சை ரிலீஸ் செய்தாலும் அல்லது ஒரு தடையில் ஏறி இறங்கினாலும், வாகனம் கட்டுப்பாடு இழந்து வாகனத்திற்கும் ஓட்டுனருக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.
HGP திராட்டில் கேபிள்கள் ஹீரோ 2 வீலர்களுக்கு என்று அதனதன் மாடல் அளவுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன. இந்த கேபிள்கள் உள்ளார்ந்த முறையில் லூப்ரிகேட் செய்யப்படுகிறது என்பதால் பயணம் சீராகவும் நீடித்து உழைக்கும் வகையிலும் அமையும்.
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
 

என் மோட்டார் சைக்கிளில் கியர் மாற்றும் செயல்பாடுகள் கடினமடைந்திருக்கிறது, அதனால் வாகனத்தை ஓட்டுவதும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு எது காரணமாக இருக்கும்?

கிளட்ச் அசெம்பிளிகள் ஒயர் மூலமாக கிளட்சை செயல்படுத்துகிறது, நீண்ட காலத்திற்கு அவை பயன்படுத்தப் படுவதால் தேய்மானம் அடைந்து நீட்சி அடையக் கூடும். கிளட்ச் ஒயர் நீண்டுவிடும் போது, கிளட்ச்-ன் பிரீ-பிளை அதிகரிக்கிறது.
இதனால் கிளட்ச் எங்கேஜ் ஆவது முழுமையாக நிகழாமல், கிளட்ச் விழுவது தடுமாறும், வண்டி ஓடாமல் இருக்கும் போதும் டிரான்ஸ்மிஷன் எங்கேஜ் ஆகியிருக்கும், கிளட்ச் தளர்ந்திருக்கும். ஒரு சில அரிதான சமயங்களில், வாகனம் வசமிழந்துவிடும், இணைப்புகளிலிருந்து ஒயர் உடைந்து வாகனத்திற்கும் ஓட்டுனருக்கும் அபாயம் விளைவிக்கும். அதனால், வழக்கமான இடைவெளிகளில் இதைப் பரிசோதித்து, தேவைப்படுவது போல் அதை மாற்றி அமைக்க வேண்டும்.
ஒரிஜினல் அல்லாத ஒயர் ஃபிரீ-பிளேயில் சரிவர பொருந்தாமல், கியர் மாற்றுவது கடினமாக உணரச் செய்யும். ஆகையால், HGP கிளட்ச் ஒயர்கள் வாகனத்தின் ஒவ்வொரு மாடலை கருத்தில் வைத்து அதற்கேற்ப வடிவமைக்கப்படுகிறது. HGP கிளட்ச் ஒயர்கள் உள்ளார்ந்த முறையில் லூப்ரிகேட் செய்யப்படுகிறது என்பதால் பயணம் சீராகவும் நீடித்து உழைக்கும் வகையிலும் அமையும்.
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

சேதமடைந்திருக்கும் ஃபூயல் ஸ்ட்ரெய்னர் ஸ்கிரீனை HGP ஃபூயல் ஸ்ட்ரெய்னர் ஸ்கிரீன் கொண்டு மட்டுமே ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும்?

எரிபொருளில் கலந்திருக்கும் அசுத்தங்களால் எரிபொருள் வடிகட்டி திரை அடைத்துக் கொள்ளலாம் அல்லது சேதமடையலாம். ஃபூயல் ஸ்ட்ரெய்னர் அடைத்துக் கொண்டிருக்கும் போது, எரிபொருள் அளவு கார்புரேட்டருக்குத் தேவையான அளவில் இருக்காது (குறிப்பாக அதிக வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது) & ஒருவேளை வடிகட்டி சேதமடைந்திருந்தால், எரிபொருள் வடிகட்டப்படாமல் கார்புரேட்டரில் நுழைந்து அதன் ஜெட்களை அடைத்துக் கொள்ளும். இரண்டில் எது நடந்தாலும், காற்று மற்றும் எரிபொருள் விகிதம் மாற்றமடைந்து அதனால், மிதமானதிலிருந்து வேகமான பயணத்தில் குறைந்த அளவு பவர் பாயும், மற்றும் ஸ்டார்டிங் டிரபிளும் இருக்கும்.
HGP ஃபூயல் ஸ்ட்ரெய்னர் எரிபொருளை சுத்தமாக வடிகட்டிய பிறகே அதை எஞ்சினுக்கு அனுப்புகிறது. கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
 

பிரேக் ஆயிலை நான் மாற்றிக்கொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும்?

காலப் போக்கில், பிரேக் ஆயில் பிரேக் குழாயிலிருந்து ஈரப்பதத்தை கிரகித்துக் கொள்ளும், அதனால் இதன் பாயிலிங் பாயின்ட் படிப்படையாகக் குறைந்து விடும். &ldquo மற்றும் Lock&rdquo குணங்களை கிரகித்துக் கொண்டிருக்கும் ஈரப்பதம் அதிகப்படுத்தும்; பிரேக்கிங் அமைப்பினால் பிரேக் ஆயில் வெப்பம் அதிகரித்து ஆயிலை கொதி நிலைக்கு கொண்டு வந்து பிரேக்கிங் அமைப்பில் குமிழிகளை உருவாக்கி பிரேக் சரிவர வேலை செய்வதை இது தடுக்கிறது. பிரேக்கிங் அமைப்பின் உள் பாகங்கள் துரு பிடிக்கவும் இது காரணமாகிறது, அதனால் பகுதி செயலிழப்புக்கும் காரணமாகிறது. பிரேக்கிங் செய்வதால் உருவாகும் வெப்பம் காரணமாகவும் பிரேக் திரவம் மோசமடையும்.
வழக்கமாக இதை ஒவ்வொரு 30000 கிமீ பயணத்திற்குப் பிறகு அல்லது 2 வருடங்களுக்குப் பிறகு இதை மாற்றிவிட வேண்டும். மூடி சீல் வைத்திருக்கும் பிரேக் திரவத்தை (DoT 3 / DoT 4) பயன்படுத்துவதால் பாதுகாப்பு அளவுகளை போதுமான ஜாக்கிரதை உணர்வுடன் பின்பற்றப்படுவதை இது உறுதி செய்யும். பிரேக் ஆயில் அளவில் குறைந்திருக்கும் போது, இழந்திருக்கும் அளவு வரையில் பிரேக் ஆயிலை டாப் அப் செய்து கொள்ள வேண்டும். DOT 3 மற்றும் & DOT 4 பிரேக் ஆயில்களை மிக்ஸ் செய்யக் கூடாது.
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

கடந்த சில நாட்களாக ஹேண்டில்பார் கடினமாக இருக்கிறது, சில சமயங்களில் ஓசைப் படுத்துகிறது. இதை எவ்வாறு சரி செய்வது என்று சொல்லுங்கள்.

ஸ்டீரிங் (ஹேண்டில்பார்) பியரிங்குகள் தளம்புவதால் அல்லது அவை தளர்ந்து விடுவதால் இது நிகழ்ந்திருக்க வேண்டும், இதற்கு சாலை பள்ளங்களும் பிரேக் பிடிப்பதும், முன் சக்கரத்தின் மீது ஏற்படும் பாரமும் காரணமாகலாம். ஒரு சில அரிதான நிகழ்வுகளில், போதுமான லூப்ரிகேஷன் கிடைக்காத போது மௌன்டிங் செக்‌ஷன்ஸ் / பியரிங் ரேஸெஸ் பழுதடைய வாய்ப்புள்ளது, இதனால் ஹேண்டில்பாரைச் சமாளிப்பது கடினமாகும், சத்தம் கேட்கும்.
HGP பால் ரேஸ் கிட் மற்றும் லூப்ரிகன்ட் பயன்படுத்தும் போது பிரச்சனை இல்லாத பயணம் நீண்ட நாட்களுக்குக் கிடைக்கும். ஸ்டீரிங் பாகங்கள் ஆயுளை நீடிக்கவும், லூப்ரிகேஷன் சிறப்பாகச் செயல்படவும் இந்த பொருள்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு 3000 கிமீ பயணம் ஓடிய பிறகு, ஸ்டியரிங் பாகங்களைச் சோதித்துக் கொள்வதும், ஒவ்வொரு 12,000 கிமீ பயணம் முடிந்த பிறகு பரிசோதனையுடன் லூப்ரிகேஷன் செய்துகொள்வதும் நல்லது.
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஷாக் அப்சார்பர்கள் பழுதானால் என்ன செய்ய வேண்டும்?

ரோடு பரப்புகள் கொடுக்கும் அதிர்வுகளை ஷாக் அப்சார்பர்கள் தாங்கிக் கொள்கின்றன. இதனால் சௌகரியம் அதிகரிக்கும், நிலைத் தன்மையும் மேம்படும். ஷாக் அப்சார்பர்கள் பழுதாகும் போது, பயணம் ஒரே சீராக இல்லாமல், ஸ்டியரிங் கட்டுப்பாடும் குறைந்திருக்கும். இதனால் டயர்களும் விரைந்து தேய்ந்து விடும்.
HGP பரிந்துரைக்கும் சஸ்பென்ஷன் பாகங்களையே பயன்படுத்தும் போது பயணம் சீராக இருக்கும், வாகனம் நிலையாக இருக்கும், பாதுகாப்புடன் நீண்ட காலத்திற்கு வாகனத்தைப் பயன்படுத்த முடியும்.
ஷாக் அப்சார்பர் ஆயிலை ஒவ்வொரு 30,000 கிமீ பயணத்திற்குப் பிறகு மாற்றிக்கொள்ள வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஏன் HGP பல்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்?

ஒரிஜினல் அல்லாத பல்புகள் இதன் இயக்கம் அடிப்படையில் வெகு சீக்கிரத்தில் பழுதாகிவிடும், காலப் போக்கில் ஒளி மங்குவதன் மூலமாக இதைத் தெரிந்துகொள்ளலாம். இயல்பு அளவை விட மாற்று பல்புகள் அதிக பவரை செலவழிக்கும், அதனால் பேட்டரி விரைந்து காலியாகிவிடும். ஆகையால், பொருத்தமான வாட்டேஜ் உள்ள பல்புகளையே மாற்றிப் பொருத்த வேண்டும்.
HGP பல்புகள் பிரகாசமான ஒளியை உமிழும், நீடித்து உழைக்கும், பவர் செலவாவதும் குறைவாக இருக்கும் அதனால் பேட்டரி சரிவர சார்ஜ் ஆகும், நீண்ட காலத்திற்கு உழைக்கும்.
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

புதிய எஞ்சின் ஆயிலுக்குப் பதிலாக காலியாகியிருக்கும் பகுதி அளவிலேயே நான் எஞ்சின் ஆயிலைப் பெற்றுக்கொள்வது சரியா?

பகுதி ஆயிலை மட்டுமே நிரப்பிக் கொள்ளும் போது அது எஞ்சினில் தங்கியிருக்கும் பழைய ஆயிலுடன் கலந்து விடும். எஞ்சின் செயல்திறன் தற்காலிகமாக மீட்டுக் கொள்ளப்படும் என்றாலும், கசடுகளும் புகைக்கரியும் எஞ்சின் செயல்பாட்டைப் பாதிக்கும். ஆகையால், பரிந்துரைக்கப்பட்ட அட்டவணை படி எஞ்சின் ஆயிலை முழுவதுமாக மாற்றி நிரப்பிக் கொள்வதே சிறந்த தேர்வாக இருக்கும். அத்துடன், எஞ்சின் ஆயில் எதனால் குறைந்திருக்கிறது என்று பரிசோதித்துப் பார்த்து அந்த பழுதை சரிசெய்துகொள்ள வேண்டும் அப்பொழுது தான் மீண்டும் எஞ்சின் ஆயில் இழப்பைத் தடுக்க இயலும்.
கூடுதல் விபரங்களுக்கு, தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

என்னிடம் ஒரு

குட்லைஃப் இன்ஸ்டா கார்டு வைத்திருக்கும் குட்லைஃப் உறுப்பினர்கள் அனைவரும் உதிரி பாகங்கள் மீது கீழேயுள்ள அடுக்குகள் அடிப்படையில் பல புதிய மதிப்பு வாய்ந்த சலுகைகள் பெற இயலும்:
• கோல்ட் உறுப்பினர்கள் (0-5000 பயின்டுகள்) - 2% தள்ளுபடி
• பிளாட்டினம் உறுப்பினர்கள் (5001- 50000 பாயின்டுகள்) - 3% தள்ளுபடி
• டயமண்ட் உறுப்பினர்கள் (>50000 பாயின்டுகள்) - 5% தள்ளுபடி
திட்டத்தில் சேரும் போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்திருக்கும் இன்ஸ்டா கார்டுகள் மீது இந்த புதிய உதிரி பாகங்கள் தள்ளுபடிகளைப் பெற முடியும். பழைய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து HGP மீது 5% தள்ளுபடி பெறுவார்கள்.
கிளிக் செய்துஉங்களுக்கு அருகிலிருக்கும் டச் பாயின்டைத் தெரிந்து கொள்ளுங்கள்.

HGP தயாரிப்புகள் எங்கே கிடைக்கின்றன?

வாடிக்கையாளர்கள் இப்பொழுதெல்லாம் சிறந்தவைகளையே விரும்புகிறார்கள் என்பதால், வாடிக்கையாளர்கள் எளிதாக தொடர்பு கொள்ளும் அனைத்து வலைப்பின்னல் இடங்களிலும் இவை கிடைக்க நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். HGP தயாரிப்புகள் மிகப் பரவலாக வலைப்பின்னலில் 75 பார்ட்ஸ் டிஸ்டிரிபூட்டர்கள், 800 அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மற்றும் 1150 அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் என்று இந்தியா முழுவதிலும் மற்றும் உலகளவில் 18 அயல் நாடுகளில் 6000 + வாடிக்கையாளர் டச் பாயின்டுகளில் இவை கிடைக்கின்றன. கிளிக் செய்துஉங்களுக்கு அருகிலிருக்கும் டச் பாயின்டைத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
  • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
  • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018