முகப்பு ரைடர் ஜோன் பைகிங் டிப்ஸ் ஓட்டுவதற்கு முந்தைய இன்ஸ்பெக்ஷன் கைடு
Menu

பேட்டரி

வழக்கமான பேட்டரி

வலப்புற கவருக்குப் பின்புறம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

பராமரிப்பு

பேட்டரி எலக்ட்ரோலைட்டை சரிபார்க்கவும். பேட்டரியிலிருக்கும் உயர் மட்ட மற்றும் தாழ் மட்ட குறிகளுக்கு இடையில் எலக்ட்ரோலைட் அளவு இருக்க வேண்டும். ஒருவேளை எலக்ட்ரோலைட் அளவு குறைந்திருந்தால், பேட்டரி நெகடிவ் மற்றும் பாசிடிவ் டெர்மினல்களிலிருந்து கேபிள் இணைப்பை எடுத்து விட்டு போல்டைக் கழற்றி பிராக்கெட்டை அகற்றி பேட்டரியை இறக்கலாம். பேட்டரி ஃபில்லர் மூடிகளை அகற்றவும்.

சிறிய பிளாஸ்டிக் ஃபன்னலைப் பயன்படுத்தி கவனமாக டிஸ்டில்ட் வாட்டரை ஊற்றி குறியை உயர் மட்ட அளவு வரை கொண்டுவர வேண்டும்.

கவனிக்கவும்
 • டிஸ்டில்ட் வாட்டரை மட்டுமே பேட்டரில் சேர்க்க வேண்டும். குழாய் நீரை சேர்த்தால் பேட்டரியின் வாழ்நாள் குறையும் வாய்ப்புள்ளது.
 • பழைய / பயன்படுத்திய பேட்டரிக்களை அங்கீகாரம்பெற்றிருக்கும் டீலர்களிடம் சேர்ப்பித்துவிட வேண்டும்.
 • போதுமான எலக்ட்ரோலைட் இல்லை என்றால், சல்ஃபேஷன் & பிளேட் சேதமடைய வாய்ப்புண்டு.

பராமரிப்பு தேவையில்லாத பேட்டரி

வலப்புற கவருக்குப் பின்புறம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இது பராமரிப்பு தேவையில்லாத (சீல் செய்யப்பட்ட) பேட்டரி என்பதால், பேட்டரி எலக்ட்ரோலைட் அளவுகளை பரிசோதிப்பதும், டிஸ்டில்ட் வாட்டரைச் சேர்ப்பதும் தேவையில்லை. ஒருவேளை பேட்டரி வீக் ஆக இருந்தால் மற்றும்/ அல்லது எலக்ட்ரோலைட் கசிந்து கொண்டிருந்தால் (ஹார்டு ஸ்டார்டிங் அல்லது வேறு எலக்டிரிக்கல் தொல்லை), அங்கீகாரம் பெற்றிருக்கும் ஹீரோ மோடோகார்ப் பணிமனையில் தொடர்பு கொள்ளுங்கள்.

கவனிக்கவும்
 • இதை சாதாரண வீட்டு கழிவாக நினைக்கக் கூடாது என்பது தான் பேட்டரியின் மேலிருக்கும் இச் சின்னத்தின் பொருள் ஆகும்.
 • இதை மறு சுழற்சிப் பொருளாக பயன்படுத்த வேண்டும் என்பதால் பழைய பேட்டரிகளை அங்கீகாரம் பெற்றிருக்கும் ஹீரோ மோடோகார்ப் பணிமனையில் திருப்ப வேண்டும் என்பது இச் சின்னத்தின் பொருள் ஆகும்.
 • பராமரிப்பு தேவையில்லாத (சீல் செய்யப்பட்ட) பேட்டரி வகை, இதன் சீல் பட்டி அகற்றப்பட்டுவிட்டால் இதற்கு நிரந்தரமாக சேதம் விளையும்.
 • சரிவர அகற்றப்படாத பேட்டரியால் சுற்றுச்சூழலுக்கும் மனித உடல்நலத்திற்கும் கேடு விளையும். பேட்டரிக்களை கழிவுகளாக அகற்ற, உள்ளூர் விதிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள்.
எச்சரிக்கை
 • இதன் இயக்கத்தின் போது வெடிக்கக் கூடிய ஹைட்ரஜன் வாயுவை பேட்டரி வெளியிடும்.
 • ஒரு தீப்பொறி அல்லது அணைக்கப்படாத தீ இந்த பேட்டரி வெடித்து உங்களுக்கு தீவிர காயம் ஏற்படுத்த காரணமாகலாம்.
 • பாதுகாப்பான ஆடை மற்றும் முகமூடி அணிந்துகொண்டு அல்லது வேலை தெரிந்த மெக்கானிக் மூலமாக பேட்டரி பராமரிப்பைச் செய்யுங்கள்.
 • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
 • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
 • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018