முகப்பு ரைடர் ஜோன் பைகிங் டிப்ஸ் ஓட்டுவதற்கு முந்தைய இன்ஸ்பெக்ஷன் கைடு
Menu

டிரைவ் செயின்

சீல் செய்யப்படாத வகை

சரிவர லூப்ரிகேஷன் செய்து அதை அட்ஜஸ் செய்து வைத்திருப்பதைப் பொருத்து டிரைவ் செயின் ஆயுள் அமையும். மோசமான பராமரிப்பினால் டிரைவ் செயின் மற்றும் ஸ்ப்ரொகெட்டுகள் அகாலத்தில் தேய்மானம் அல்லது சேதம் அடையும். ஓட்டுவதற்கு முந்தைய பரிசோதனையில் டிரைவ் செய்னையும் அது சரிவர லூப்ரிகேட் ஆகிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். மிக அதிக பயன்பாடு, அல்லது வழக்கமில்லாத தூசுகள் நிறைந்த பகுதிகளில் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்படும் காலங்களில் இதை அடிக்கடி சரிபார்த்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

பரிசோதனைகள்
 • எஞ்னினை "ஆஃப்" செய்து ஸ்டாண்டு போட்டு வைத்த பிறகு டிரான்ஸ்மிஷனை நியூட்ரலில் மாற்ற வேண்டும். ஹோல் மூடியை அகற்ற வேண்டும்.
 • டிரைவ் செயின் இளகியிருப்பதை அட்ஜஸ் செய்து கையால் அசைக்கும் போது சுமார் 25 மிமீ மேலே எழும்புவது போல் இருக்க வேண்டும்.
 • வீலை சுழற்றிப் பார்த்து டிரைவ் செயின் ஸ்லாக்கும் சுற்றுகிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். வீல் சுழலும் போது டிரைவ் செயின் ஸ்லாக் சுற்றாமல் இருக்க வேண்டும். ஒருவேளை செயின் ஒரு பகுதியில் இறுக்கமாகவும் மறு பகுதியில் தொய்வாகவும் இருந்தால் ஒரு சில லிங்குகள் சுருண்டு பிடித்துக் கொண்டிருக்கும். அடிக்கடி லூப்ரிகேஷன் செய்து வைத்துக்கொண்டால் இது போன்ற பிடிப்புகளை நீக்கிவிடலாம்.
 • செயினை திருப்பி ஹோலில் செயின் லாக் பிளேட்டைப் பார்க்கலாம். செயின் சுழலும் திசைக்கு எதிர் திசையில் செயின் லாக் பிளேட் திறந்திருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்ளவும்.
 • ஸ்ப்ரொகெட் பற்களைப் பார்த்து அவை தேய்ந்திருக்கிறதா அல்லது சேதமடைந்திருக்கிறதா என்பதை பரிசோதிக்கவும்.

  ஒருவேளை டிரைவ் செயின் அல்லது ஸ்ப்ரொகெட்டுகள் மிக அதிகம் தேய்ந்திருந்தால் அல்லது சேதமடைந்திருந்தால் அவற்றை மாற்ற வேண்டும். புதிய செயினை தேய்ந்து போன ஸ்ப்ரொகெட்டுகள் மீது பயன்படுத்தக் கூடாது, இது செயின் தேய்மானத்தை அதிகரிக்கும்.

அட்ஜஸ்ட்மென்ட்
 • மோட்டார் சைக்கிள் எஞ்சின் இக்னிஷனை "ஆஃப்" செய்துவிட்டு டிரான்ஸ்மிஷனை நியூட்ரலில் வைத்து மோட்டர் சைக்கிளை பார்க் செய்யவும்.
 • ரியர் ஆக்ஸில் நட் மற்றும் ஸ்லீவ் நட் இரண்டையும் இளகச் செய்யவும்.
 • டிரைவ் செயின் லாக் நட்டையும் இளகச் செய்யவும்.
 • டிரைவ் செயின் ஸ்லாக் சரியாக இருக்கும் விதத்தில் அட்ஜஸ்டிங் நட்டுகள் இரண்டையும் ஒரே எண்ணிக்கையில் திருகவும். அட்ஜஸ்டிங் நட்டை கடிகார முள் திசையில் திருப்பி ஸ்லாக்கை குறைக்கலாம் அல்லது கடிகார முள் திசைக்கு எதிர் திசையில் திருப்பி செயின் ஸ்லாக்கை அதிகரிக்கலாம்.
 • செயின் அட்ஜஸ்டர் இண்டெக்ஸ் மார்க்கை ஸ்விங் ஆர்ம் இரண்டு பக்க ஸ்கேல் கிராஜுவேஷன்களில் அதற்கு இணையாக இருக்கும் படி செய்யவும்.
 • ரியர் ஆக்ஸிலை அதன் அதிகபட்ச ஓரத்திற்கு அசைத்த பிறகும் செயின் ஸ்லாக் மிக அதிகமாக இருந்தால், டிரைவ் செயின் தேய்ந்திருக்கிறது, அதை மாற்ற வேண்டும்.
 • ரியர் ஆக்ஸில் நட் மற்றும் ஸ்லீவ் நட் இரண்டையும் இறுக்கவும்.
  - ரியர் ஆக்ஸில் நட் முறுக்கம்: 5.4 kgf-m.
  - ஸ்லீவ் நட் முறுக்கம்: 4.4 kgf-m.
 • டிரைவ் செயின் ஸ்லாக்கை மறுபடியும் சோதிக்கவும்.
 • டிரைவ் செயின் ஸ்லாக்கை சரிசெய்ய ரியர் வீலை மறுபடியும் மாட்டி வைக்கும் போது ரியர் பிரேக் பெடல் ஃபிரீ பிளே மற்றும் ஸ்டாப் லாம்ப் சுவிட்ச் ஃபிரீ பிளே பாதிப்படையும். ரியர் பிரேக் பெடல் ஃபிரீ பிளேயை சோதித்து தேவைப்பட்டால் அட்ஜஸ் செய்யவும்.
லூப்ரிகேஷன்

1. எஞ்னினை "ஆஃப்" செய்து ஸ்டாண்டு போட்டு வைத்த பிறகு டிரான்ஸ்மிஷனை நியூட்ரலில் மாற்ற வேண்டும்.

2. டிரைவ் செயினை லூப்ரிகேட் செய்ய தாராளமாக SAE 90 ஆயிலை பயன்படுத்தவும்.

கவனிக்கவும்

பராமரிப்பு அட்டவணையைப் பின்பற்றி ரெகுலராக அட்ஜஸ் செய்து லூப்ரிகேட் செய்து வைத்துக்கொண்டால் சிறந்த செயல்திறனுடன் நீடித்து உழைக்கும்.

கவனிக்கவும்

ஒவ்வொரு முறை 2000 கிமீ ஓடிய பிறகு அங்கீகாரம் பெற்ற ஹீரோ மோடோகார்ப் பணிமனையில் டிரைவ் செயின் இன்ஸ்பெக் ஷன், கிளீனிங், லூப்ரிகேஷன் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்ளுங்கள்.

சீல் செய்யப்பட்ட வகை

சரிவர லூப்ரிகேஷன் செய்து அதை அட்ஜஸ் செய்து வைத்திருப்பதைப் பொருத்து டிரைவ் செயின் ஆயுள் அமையும். மோசமான பராமரிப்பினால் டிரைவ் செயின் மற்றும் ஸ்ப்ரொகெட்டுகள் அகாலத்தில் தேய்மானம் அல்லது சேதம் அடையும். ஓட்டுவதற்கு முந்தைய பரிசோதனையில் டிரைவ் செய்னையும் அது சரிவர லூப்ரிகேட் ஆகிறதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். மிக அதிக பயன்பாடு, அல்லது வழக்கமில்லாத தூசுகள் நிறைந்த பகுதிகளில் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்படும் காலங்களில் இதை அடிக்கடி சரிபார்த்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

பரிசோதனைகள்
 • எஞ்சினை ஆஃப் செய்துவிட்டு, பின் சக்கரத்தை தரையிலிருந்து எழும்பியிருக்க எஞ்சின் அடியில் சப்போர்ட் பிளாக்கை வைத்து டிரான்ஸ்மிஷனை நியூட்ரலுக்கு மாற்றுங்கள்.
 • ஸ்ப்ரொக்கெட்டுகள் இடையில் லோயர் டிரைவ் செயின் ரன் நடுவில் டிரைவ் செயின் ஸ்லாக்கை பரிசோதிக்கவும். டிரைவ் செயின் ஸ்லாக்கை அட்ஜஸ் செய்து மேலே எழும்புவது போல் இருக்க வேண்டும்.
டிரைவ் செயின் ஸ்லாக்: 25 மிமீ

பின் சக்கரத்தை சுழற்றவும். நிறுத்தவும். டிரைவ் செயின் ஸ்லாக்கை சோதிக்கவும். இதே போன்று பல தடவை செய்யவும். டிரைவ் செயின் ஸ்லாக் சுற்றாமல் இருக்க வேண்டும். செயின் ஒவ்வொரு பகுதியில் மட்டுமே ஸ்லாக்காக இருந்தால் ஒரு சில லிங்குகள் சுருண்டிருக்கும் அல்லது பிடித்துக் கொண்டிருக்கும். அடிக்கடி லூப்ரிகேஷன் செய்து வைத்துக்கொண்டால் இது போன்ற பிடிப்புகளை நீக்கிவிடலாம்.

கவனிக்கவும்
 • டிரைவ் செயின் மிக அதிக அளவில் இளகியிருந்தால் ஃபிரேமின் அடிப்புறத்தை சேதப்படுத்தும் அல்லது ஸ்ப்ரோக்கெட்டுகளிலிருந்து செயின் கழற்றிக் கொள்ளும்.
 • பின் சக்கரத்தை மெதுவாக சுழற்றி, டிரைவ் செயின் மற்றும் ஸ்ப்ரொகெட்டுகளை கீழேயுள்ளவைகளுக்காக பரிசோதிக்க வேண்டும்:
டிரைவ் செயின்
 • சேதமடைந்திருக்கும் ரோலர்கள்
 • லூசாகியிருக்கும் பின்கள்
 • உலர்ந்திருக்கும் அல்லது துருபிடித்திருக்கும் லிங்குகள்
 • சுருண்டிருக்கும் அல்லது பிடித்துக் கொண்டிருக்கும் பிணைப்புகள்
 • மிக அதிக தேய்மானம்
 • சரியில்லாத அட்ஜஸ்ட்மென்ட்
 • சேதமடைந்திருக்கும் அல்லது விடுபட்டிருக்கும் ஓ-ரிங்குகள்
ஸ்ப்ரொகெட்டுகள்
 • மிக அதிகம் தேய்ந்திருக்கும் பற்கள்
 • உடைந்த அல்லது சேதமடைந்த பற்கள்

டிரைவ் செயினில் சேதமடைந்த ரோலர்கள், லூஸ் லிங்குகள் அல்லது விடுபட்டிருக்கும் ஓ-ரிங்குகள் இருந்தால், செயினை மாற்ற வேண்டும். ஒருவேளை செயின் உலர்ந்திருந்தால் அல்லது துருபிடித்திருந்தால், லூப்ரிகேட் செய்ய வேண்டும். லிங்குகள் சுருண்டிருந்தால் அல்லது பிடித்துக் கொண்டிருந்தால், செயினை லூப்ரிகேட் செய்யவும். லூப்ரிகேஷன் செய்தும் பிரச்சனை சரியாகவில்லை என்றால், செயினை மாற்றவும்.

ஒருவேளை டிரைவ் செயின் அல்லது ஸ்ப்ரோக்ட்டுகள் மிக அதிகமாக தேய்ந்திருந்தால் அல்லது சேதமடைந்திருந்தால் அவற்றை மாற்ற வேண்டும்.

கவனிக்கவும்

டிரைவ் செயினையும் ஸ்ப்ரொகெட்டுகளையும் எப்பொழுதும் ஒரு செட்டாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், புதிதாகப் போடப்படும் ஒரு பார்ட் விரைந்து தேய்ந்துவிடும்.

கவனிக்கவும்

தேவைப்பட்டால், ஒவ்வொரு 1000 கிமீ ஓடிய பிறகு டிரைவ் செயின் ஸ்லாக்கை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை செயின் உலர்ந்திருப்பது போல் தோன்றினால், ஒவ்வொரு 1000 கிமீ ஓடிய பிறகு அல்லது அதற்கும் முன்னதாக லூப்ரிகேட் செய்துகொள்ள வேண்டும்.

டிரைவ் செயின் தேய்மான அறிகுறி

டிரைவ் செயின் ஸ்லாக்கை அட்ஜஸ்ட் செய்த பிறகு தேய்மான இண்டிகேட்டர் லேபிலில் இரட்டை அம்புக்குறி சிவப்பு கோட்டைத் தொட்டால், டிரைவ் செயின் கிட்டை மாற்ற வேண்டும்.

கவனிக்கவும்

ஒரு புதிய டிரைவ் செயின் கிட்டைப் பொருத்தும் போது, டிரைவ் செயின் ஸ்லாக்கை அட்ஜஸ் செய்து, ஒரு புதிய தேய்மான இண்டிகேட்டர் லேபிலையும் பொருத்த வேண்டும், இதை இரட்டை அம்புக்குறியை லேபிலில் கருப்பு கோட்டில் வைக்க வேண்டும்.

 • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
 • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
 • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018