முகப்பு என் ஹீரோ பைகிங் டிப்ஸ் ஓட்டுவதற்கு முந்தைய இன்ஸ்பெக்ஷன் கைடு
Menu

எஞ்சின் ஆயில் அளவு

எஞ்சின் ஆயில்: ஹீரோ ஜெனூயின் எஞ்சின் ஆயிலை மட்டும் பயன்படுத்தவும்

பிராண்டு: ஹீரோ 4T பிளஸ்

கிரேடு: SAE 10W 30 SJ Grade (JASO MA).

உற்பத்தியாளர்கள்:

1. டைட் வாட்டர் ஆயில் கம்பெனி (இந்தியா) லிமிடெட்.

2. சவிதா ஆயில் டெக்னாலஜிஸ் லிமிடெட்.

3. பாரத் பெட்ரோலியம் கார்பொரேஷன் லிமிடெட்.

எஞ்சின்ஸ் வித் ஆயில் லெவல் டிப்ஸ்டிக்

எஞ்சின் ஆயில் லெவல் செக்

 • மோட்டர் சைக்கிளை ஓட்டத் தொடங்கும் முன்னர் எஞ்சின் ஆயில் லெவலை சரிபார்க்கவும்.
 • இதற்குப் பயன்படும் ஆயில் லெவல் டிப்ஸ்டிக் வலப்புற கிராங்க்கேஸ் கவரில் உள்ளது.
 • ஆயில் லெவல் டிப்ஸ்டிக் உயர் மட்ட மற்றும் தாழ் மட்ட குறிகளுக்கு இடையில் ஆயில் அளவு இருக்க வேண்டும்.
 • ஆயில் அளவு கீழ் மட்ட குறியைத் தொடுவது போலிருந்தால் அல்லது ஒவ்வொரு 3000 கிமீ ஓட்டத்திற்கு, எது முதலில் நிகழ்கிறதோ அது, டாப் அப் செய்யவும்.

எஞ்சின் ஆயில் டாப் அப் செய்யும் முறை

 • எஞ்சின் & ஸ்டார்ட் செய்து 3-5 நிமிடங்களுக்கு ஐடிலாக ஓட விடவும்.
 • எஞ்சின் & நிறுத்தி மோட்டர் சைக்கிளை அதன் மெயின் ஸ்டாண்டில் தரையில் நேராக நிறுத்தவும்.
 • ஆயில் லெவல் டிப்ஸ்டிக்கை எடுத்து சுத்தமாக துடைத்துக் கொள்ளவும்.
 • ஆயில் லெவல் டிப்ஸ்டிக்கை செருக வேண்டும், ஸ்குரூ செய்யாமல். பிறகு வெளியில் எடுத்து ஆயில் அளவைப் பார்க்கவும்.
 • தேவைப்பட்டால், மேல் மட்ட குறியை எட்டும் வரை குறிப்பிட்ட ஆயிலை நிரப்பவும். மிக அதிகமாக நிரப்பக் கூடாது.
 • மறுபடியும் ஆயில் லெவல் டிப்ஸ்டிக்கை செருகி ஆயில் லீக் ஏதாவது இருக்கிறதா என்பதைப் பார்க்கவும்.

எஞ்சின்ஸ் வித் ஆயில் லெவல் விண்டோ

எஞ்சின் ஆயில் லெவல் செக்

 • மோட்டர் சைக்கிளை ஓட்டத் தொடங்கும் முன்னர் எஞ்சின் ஆயில் லெவலை ஆயில் லெவல் விண்டோவில் ஒவ்வொரு நாளும் சரிபார்க்கவும்.
 • மேல் மட்டக் குறி மற்றும் கீழ் மட்டக் குறிகளுக்கு இடையில் ஆயில் லெவல் இருக்க வேண்டும்.
 • ஆயில் அளவு கீழ் மட்ட குறியைத் தொடுவது போலிருந்தால் அல்லது ஒவ்வொரு 3000 கிமீ ஓட்டத்திற்கு, எது முதலில் நிகழ்கிறதோ அது, டாப் அப் செய்யவும்.

எஞ்சின் ஆயில் டாப் அப் செய்யும் முறை

 • எஞ்சின் & ஸ்டார்ட் செய்து 3-5 நிமிடங்களுக்கு ஐடிலாக ஓட விடவும்.
 • எஞ்சின் & நிறுத்தி மோட்டர் சைக்கிளை அதன் மெயின் ஸ்டாண்டில் தரையில் நேராக நிறுத்தவும்.
 • 2-3 நிமிடங்களுக்குப் பிறகு மறுபடியும் ஆயில் லெவலை ஆயில் லெவல் விண்டோவில் பார்க்கவும். மேல் மட்டம் மற்றும் கீழ் மட்டக் குறிகளுக்கு இடையில் ஆயில் லெவல் இருக்க வேண்டும்.
 • ஆயில் ஃபில்லர் மூடியை திறந்து குறிப்பிட்ட ஆயிலை மேல் மட்ட குறி அளவிற்கு நிரப்ப வேண்டும். மிக அதிகமாக நிரப்பக் கூடாது.
 • ஆயில் ஃபில்லர் கேப் & பொருத்தி ஏதாவது ஆயில் கசிவுகள் உள்ளதா என்று பார்க்கவும்.
 • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
 • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
 • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018