முகப்பு ரைடர் ஜோன் பைகிங் டிப்ஸ் ஓட்டுவதற்கு முந்தைய இன்ஸ்பெக்ஷன் கைடு
Menu

பிரேக்குகள்

ஃபிரண்ட் / ரியர் பிரேக் (டிஸ்க் டைப்)

இயக்கத்தை சோதித்து தேவைப்பட்டால் ஃபிரீ பிளேயை அட்ஜஸ் செய்யவும்

 • வலப்புற ஹேண்டில்பாரில் மாஸ்டர் சிலிண்டர் / ரிசர்வாயர் பொருத்தப்பட்டுள்ளது
 • வலப்புற கவருக்கு பின்புறம் பேட்டரிக்கு அடுத்ததாக மாஸ்டர் சிலிண்டர் / ரிசர்வாயர் உள்ளது.
 • மாஸ்டர் சிலிண்டரில் பொருத்தமான பிரேக் திரவம் உள்ளதை சரி பார்க்கவும்.

பரிந்துரைக்கப்படும் பிரேக் திரவம்: DOT 3 அல்லது DOT 4

 • முன்புறத்தில் தரைக்கு இணையாக உள்ள பிரேக் மாஸ்டர் சிலிண்டரில் "MIN'' அளவுக்கும் குறைவாக பிரேக் திரவம் இறங்காமல் பார்த்துக்கொள்ளவும்.
 • பிஸ்டன் அசைவினால் பேட் தேய்மானத்தை ஈடுகட்டும் வகையில் இந்த அளவு படிப்படியாகக் குறையும்.
 • ஒருவேளை இந்த அளவு ஒரேயடியாக குறைந்தால், பிரேக் அமைப்பில் ஏதாவது கசிவு உள்ளதா என்பதைச் சோதிக்க வேண்டும், அங்கீகாரம் பெற்ற உங்கள் ஹீரோ மோடோகார்ப் பணிமனையில் இதை பரிசோதித்துக் கொள்ளலாம்.
கவனிக்கவும்
 • பிரேக் பேடுகள் காலிபர் மற்றும் டிஸ்க் இடையில் சேகரமாகியிருக்கும் அழுக்கு மற்றும் சேறுகளை வாட்டர் ஜெட்டினால் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
 • தேவைப்படும் போது மாஸ்டர் சிலிண்டரில் மறுநிரப்பு செய்துகொள்ள அங்கீகாரம் பெற்ற உங்கள் ஹீரோ மோடோகார்ப் பணிமனையுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
கவனிக்கவும்

DOT 3 மற்றும் DOT 4 பிரேக் திரவங்களை ஒரு போதும் கலக்கக் கூடாது.

ஃபிரன்ட் பிரேக் (டிரம் டைப்)

 • மோட்டார் சைக்கிளை அதன் மெயின் ஸ்டாண்டில் நிறுத்தவும்.
 • தூரத்தை அளக்க வேண்டும், பிரேக் பிடிக்கும் முன்னர் ஃபிரன்ட் பிரேக் லீவர் அசையும்.
 • பிரேக் லீவரின் முனையில் 10-20 மிமீ ஃபிரீ பிளே இருக்க வேண்டும்.
 • அட்ஜஸ்ட்மென்ட் தேவை என்றால், அட்ஜஸ்டிங் நட்டை திருப்பவும்.
 • இறுதி ஃபிரீ பிளே அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொண்ட பிறகு, அட்ஜஸ்டிங் நட்டின் கட்-அவுட் பிரேக் ஜாயின்ட் பின் மீது அமர்ந்திருக்க வேண்டும்.
 • பல முறை பிரேக்கை அழுத்திப் பார்த்து பிரேக்கை விடுவித்ததும் ஃபிரீ வீல் சுழற்சியை பரிசோதிக்க வேண்டும்.
கவனிக்கவும்

இம் முறையில் சரியான அட்ஜஸ்ட்மென்ட் கிடைக்கவில்லை என்றால், அங்கீகாரம் பெற்ற உங்கள் ஹீரோ மோடோகார்ப் பணிமனையில் இதை செய்துகொள்ள வேண்டும்.

ரியர் பிரேக் (டிரம் டைப்)

 • மோட்டார் சைக்கிளை அதன் மெயின் ஸ்டாண்டில் நிறுத்தவும்.
 • தூரத்தை அளக்க வேண்டும், பிரேக் பிடிக்கும் முன்னர் பிரேக் பெடல் அசையும்.
 • ஃபிரீ பிளே அளவு 20-30 மிமீ இருக்க வேண்டும்.
 • அட்ஜஸ்ட்மென்ட் தேவை என்றால், ரியர் பிரேக் அட்ஜஸ்டிங் நட்டை திருப்பவும்.
 • இறுதி ஃபிரீ பிளே அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொண்ட பிறகு, அட்ஜஸ்டிங் நட்டின் கட்-அவுட் பிரேக் ஜாயின்ட் பின் மீது அமர்ந்திருக்க வேண்டும்.
 • பல முறை பிரேக்கை அழுத்திப் பார்த்து பிரேக்கை விடுவித்ததும் ஃபிரீ வீல் சுழற்சியை பரிசோதிக்க வேண்டும்.
கவனிக்கவும்

இம் முறையில் சரியான அட்ஜஸ்ட்மென்ட் கிடைக்கவில்லை என்றால், அங்கீகாரம் பெற்ற உங்கள் ஹீரோ மோடோகார்ப் பணிமனையில் இதை செய்துகொள்ள வேண்டும்.

பிரேக் தேய்மான இண்டிகேட்டர் (டிஸ்க் டைப்)

மாஸ்டர் சிலிண்டரில் பிரேக் திரவ அளவை சரிபார்த்துக் கொள்ளவும். வலப்புற ஹேண்டில்பாரில் மாஸ்டர் சிலிண்டர் / ரிசர்வாயர் உள்ளது

பிரேக் பேட் தேய்மானம்
 • எவ்வளவு அதிகம் வாகனத்தை பயன்படுத்துகிறீர்கள், உங்கள் ரைடு வகை & ரோடு கண்டிஷன் ஆகியவை பொருத்து பிரேக் பேட் தேய்மானம் இருக்கும்.
 • பொதுவாக, ஈரம் & உலர்ந்த சாலைகளில் பிரேக் பேடுகள் அதிக தேய்மானமடையும். வழக்கமான இடைவெளிகளில் பேடுகளைப் சோதித்துக்கொள்ள வேண்டும்.
 • ஒவ்வொரு பேடில் உள்ள தேய்மான அளவு பள்ளத்தைப் பார்த்து பிரேக் பேடுகள் தேய்ந்திருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
 • இரண்டில் ஒரு பேடு பள்ள அளவு வரையில் தேய்ந்திருக்கிறது என்றால், இரண்டு பேடுகளையும் ஒரு செட்டாக மாற்ற வேண்டும். அங்கீகாரம் பெற்ற உங்கள் ஹீரோ மோடோகார்ப் பணிமனையில் இதை செய்துகொள்ளலாம்.
எச்சரிக்கை

முன்புற மற்றும் பின்புற பிரேக்குகளை ஒரே சமயத்தில் அழுத்தி நிறுத்த பழகுங்கள், இதனால் வாகனம் சறுக்காமல் இருக்கும்.

பிரேக் தேய்மான இண்டிகேட்டர்ஸ் (டிரம் டைப்)

 • பிரேக் போடும் போது, பிரேக் ஆர்முடன் இணைக்கப்பட்டிருக்கும் ஓர் அம்பு அசைந்து பிரேக் பேனலிலுள்ள ரெஃபரென்ஸ் மார்க் நோக்கி அசையும்.
 • பிரேக்கை முழுவதும் அழுத்தும் போது இந்த அம்பு ரெஃபரென்ஸ் மார்க்குடன் ஒன்றாக ஒட்டிச் சேருகிறது என்றால், பிரேக் ஷூக்களை மாற்ற வேண்டும்.
 • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
 • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
 • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018