முகப்பு என் ஹீரோ பைகிங் டிப்ஸ் ஓட்டுவதற்கு முந்தைய இன்ஸ்பெக்ஷன் கைடு
Menu

ஃபூயல் லெவல் / ஃபூயல் வால்வ்

 • உங்கள் ஒவ்வொரு பயணத்திலும் போதுமான எரிபொருள் உங்கள் ஃபூயல் டேங்கில் இருப்பவதை கவனித்துக் கொள்ளுங்கள். கசிவுகள் இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.
 • ஃபூயல் டேங்கிலுள்ள எரிபொருள் அளவை கன்சோலில் உள்ள டிஸ்பிளேயில்/ஃபூயல் காஜ் மீட்டரில் குத்து மதிப்பாக பல கட்டங்களாக காட்டப்படும்.
 • சிவப்பு குறிக்கு மேலாக ஒரே ஒரு கட்டப் பிரிவு காட்டப்பட்டால் / ஃபூயல் காஜ் மீட்டரில் சிவப்பு குறியை ஊசி தொட்டுக் கொண்டிருந்தால், கூடிய சீக்கிரத்தில் எரிபொருள் தீர்ந்து விடும் என்றும் ஆகையால் உடனே எரிபொருள் நிரப்பிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஹீரோ மோடோகார்ப் வாகனங்கள் ஃபூயல் வால்வ் அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன,

 • கார்புரேட்டர் மோட்டார் சைக்கிள்கள் (ஃபூயல்வ் வால்வ்)
 • புரொக்ராம்ட் FI மோட்டர் சைக்கிள்கள் (ஃபூயல் இன்ஜெக்ஷன்)
 • ஸ்கூட்டர்கள் (ஆட்டோ ஃபூயல் வால்வ்)

மூன்று வழி ஃபூயல் வால்வ் கார்புரேட்டரின் இடதுபுறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆஃப் - "ஆஃப்" பொஷிசனில் டேங்கிலிருந்து கார்புரேட்டருக்கு எரிபொருள் பாயாது. டூ வீலர் பயன்பாட்டில் இல்லாத போது வால்வை "ஆஃப்" பொஷிசனுக்கு திருப்பிவிட வேண்டும்.

ஆன் - "ஆன்" பொஷிசனில் டேங்கிலிருந்து கார்புரேட்டருக்கு எரிபொருள் பாயும்.

ரிசர்வ் - "ரிசர்வ்" பொஷிசனில் ரிசர்வ் எரிபொருள் டேங்கிலிருந்து கார்புரேட்டருக்கு எரிபொருள் பாயும். மெயின் சப்ளை முடிவடைந்த பிறகு மட்டுமே ரிசர்வ் ஃபூயலைப் பயன்படுத்த வேண்டும். "ரிசர்வ்" பொஷிசனுக்கு வால்வைத் திருகியவுடன், கூடிய சீக்கிரத்தில் டேங்கில் எரிபொருளை நிரப்பிக்கொள்ள வேண்டும். ரிசர்வ் சப்ளை ஒவ்வொரு மாடலுக்கும் குறிப்பிட்ட அளவில் இருக்கும்.

கவனிக்கவும்

 • ரீஃபில் செய்து கொண்ட பிறகு டூ வீலரை "ரிசர்வ்" பொஷிசனில் ஓட்டிச் செல்லக் கூடாது, ஏனென்றால், உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் ரிசர்வ் எரிபொருளைப் பயன்படுத்திவிடுவீர்கள்.
 • ஃபூயல் வால்வை ஒருபோதும் "ஆன்" மற்றும் "ஆஃப்" பொஷிசன் இடையில் வைத்துக்கொண்டு வாகனத்தை ஓட்டிச் செல்லக் கூடாது, ஏனென்றால், உங்கள் ரிசர்வ் எரிபொருளையும் நீங்கள் பயன்படுத்திவிடுவீர்கள்.

கவனிக்கவும்

 • வெயில் நேரடியாகப் படும் விதமாக உங்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைக்கக் கூடாது, இதனால் வெயில் வெப்பத்தால் பெட்ரோல் ஆவியாகும், புற ஊதாக் கதிர்களால் பெயின்ட் பூச்சும் மங்கிவிடும்.

எச்சரிக்கை

 • பெட்ரோல் வெகு சீக்கிரத்தில் தீ பிடிக்கும், ஒரு சில நிலைமையில் வெடித்துவிடும் அபாயமும் உண்டு.
 • ரீஃபில் செய்வதை காற்றோட்டமுள்ள திறந்த வெளியில் செய்ய வேண்டும், அப்பொழுது வாகன எஞ்சின் நிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.
 • பெட்ரோல் ரீஃபில் செய்யும் இடத்திற்கு அருகில் அல்லது பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் அணைக்கப்படாத தீ கொழுந்து அல்லது தீப்பொறி, புகைபிடித்தல் கூடாது.
 • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
 • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
 • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018