முகப்பு ரைடர் ஜோன் பைகிங் டிப்ஸ் ஓட்டுவதற்கு முந்தைய இன்ஸ்பெக்ஷன் கைடு
Menu

டயர்கள்

டியூப் உள்ள டயர்கள்

உங்கள் மோட்டார் சைக்கிளில் பொருத்தப்படும் டயர்கள் உங்கள் மோட்டார் சைக்கிளின் செயலாற்றல்களுடன் ஈடுகொடுத்து அதன் ஓட்டம், பிரேக்கிங், நீடித்த உழைப்பு மற்றும் சௌகரியத்திற்கு துணை நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் மோட்டார் சைக்கிளை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த அதன் டயர்கள் பரிந்துரைக்கப்பட்ட வகையிலும் அளவிலும், நல்ல நிலையில் போதுமான அழுத்தத்துடன் சரிவர ஊதிப் பெருக்கச் செய்ததாக இருப்பது அவசியம்.

காற்று அழுத்தம்

சரிவர ஊதி பெருக்கப்பட்ட டயர்கள் வாகனத்தைக் கையாள்வதற்கு, மிதி அழுத்தமுள்ளதாக, ஓட்டுவதற்கு வசதியாக அனைத்தும் ஒருங்கே பெற்றிருக்கும். பொதுவில், சரிவர ஊதி பெருக்கப்படாத டயர்கள் தாறுமாறாக தேய்மானமடையும், வாகனத்தை கையாள்வது கடினமாக இருக்கும், மிக அதிக வெப்பமடைந்து சிக்கல் ஏற்படுத்தும். காற்றழுத்தம் குறைந்திருக்கும் டயர்கள் பாறை நிலத்தில் வீல்களைச் சேதப்படுத்தும்.

மிக அதிக காற்று நிரப்பப்பட்ட டயர்களுடன் மோட்டர் சைக்கிள் ஓட்டம் கடுமையாக இருக்கும், நிலப்பரப்பு அபாயங்களால் வாகனத்திற்கு சேதம் ஏற்படும், தேய்மானமும் சீராக இருக்காது. வால்வு ஸ்டெம் மூடியை சரியாக மூடி வைக்கவும். தேவைப்படும் போது புதிய மூடியைப் பொருத்தவும்.

கவனிக்கவும்

மிக அதிகம் / குறைந்த காற்று நிரப்புவது வாகன செயல்திறனை பாதிக்கும்.

பரிசோதனைகள்

நீங்கள் டயர் பிரெஷரை சோதித்துக்கொள்ளும் போதெல்லாம், டயர் அழுத்தம் & -யையும் சோதிக்க வேண்டும், பக்கச் சுவர்களில் ஏதாவது தேய்மானம் உள்ளதா, வெளிப் பொருள்களால் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

இதை கவனியுங்கள்:

 • டயர் பக்கவாட்டில் மற்றும் அழுத்தும் பகுதிகளில் உப்பல் அல்லது வீக்கம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். டயர்களில் உப்பல் அல்லது வீக்கம் இருந்தால், டயர்களை மாற்ற வேண்டி இருக்கும்.
 • டயர்களில் வெட்டுக் காயம், பிளவு அல்லது வெடிப்பு.
 • அழுந்தும் பகுதியில் மிக அதிக தேய்மானம்
கவனிக்கவும்

ஏதாவது பள்ளத்தில் இறங்கி ஏறும் போது, அல்லது கடின பொருள்களை இடிக்கும் போது, முடிந்த வரையில் விரைவாக ஓரம் கட்டி டயர்களுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

அழுத்தும் பகுதியில் தேய்மானம்

டயர்கள் மீது தேய்மான அறிகுறிகள் தெரிய வந்ததும், அந்த டயரை மாற்றிவிட வேண்டும். டிரெட் வியர் இண்டிகேட்டரைப் பார்த்து டயர் தேய்மானத்தை தெரிந்து கொள்ளலாம்.

யூனிடைரெக்ஷனல் டயர்கள்

வீல் முன் சுழலும் திசை நோக்கியே டயரிலுள்ள அம்புக் குறியும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு சமயம் பங்க்சர் ஏற்படும் போதெல்லாம் டயரைக் கழற்றி மாட்டும் போது இதை கவனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை
 • மிக அதிக தேய்மானமடைந்த அல்லது சரிவர ஊதி பெருக்கப்படாத டயர்களைப் பயன்படுத்துவதால் விபத்துகள் நிகழ்ந்து உங்களுக்கு பலத்த காயம் அல்லது மரணம் ஏற்படக் கூடும்.
 • மிக அதிக தேய்மானமடைந்த டயர்கள் அபாயமானவை, வாகன இழுவையையும், வாகனத்தைக் கையாள்வதையும் மிக மோசமாகப் பாதிக்கும்.
 • இந்த ஓனர் மேனுவலில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து குறிப்புகளையும் பின்பற்றி டயரில் காற்று நிரப்புதலையும் பராமரிப்பையும் மேற்கொள்ள வேண்டும்.
 • டயரில் குறைந்த காற்று இருந்தால் டயர் ஸ்லிப் ஆவதற்கு அல்லது ரிம்மிலிருந்து டயர் கழன்று கொள்வதற்கு ஏதுவாகும்.

டியூப்லெஸ் டயர்ஸ்

உங்கள் மோட்டர் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருக்கும் டயர்கள் டியூப்லெஸ் வகை ஆகும்.

உங்கள் மோட்டார் சைக்கிளை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவும் நீங்கள் எடுத்துச் செல்லும் பாரத்திற்கு ஏற்ற வகையிலும் அதன் டயர்கள் பரிந்துரைக்கப்பட்ட வகையில், அளவில், நல்ல நிலையில் போதுமான அழுத்தத்துடன் சரிவர ஊதிப் பெருக்கச் செய்ததாக இருக்க வேண்டும். இனி வரும் பக்கங்களில், எப்பொழுது எப்படி காற்று அழுத்தத்தைச் சோதிக்க வேண்டும், சேதமடைந்திருப்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது, டயர்கள் ரிப்பேர் மற்றும் டயர்கள் மாற்றுவது குறித்த அதிக விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

எச்சரிக்கை

மிக அதிக தேய்மானமடைந்த அல்லது சரிவர ஊதி பெருக்கப்படாத டயர்களைப் பயன்படுத்துவதால் விபத்துகள் நிகழ்ந்து உங்களுக்கு பலத்த காயம் அல்லது மரணம் ஏற்படக் கூடும். டயரில் காற்றழுத்தம் மற்றும் பராமரிப்பு குறித்து இந்த ஓனர் மேனுவலில் கொடுத்திருக்கும் குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

காற்று அழுத்தம்

சரிவர ஊதி பெருக்கப்பட்ட டயர்கள் வாகனத்தைக் கையாள்வதற்கு, மிதி அழுத்தமுள்ளதாக, ஓட்டுவதற்கு வசதியாக அனைத்தும் ஒருங்கே பெற்றிருக்கும். பொதுவில், சரிவர ஊதி பெருக்கப்படாத டயர்கள் காரணமாக வாகனத்தை கையாள்வது கடினமாக இருக்கும், மிக அதிக வெப்பமடைந்து சிக்கல் ஏற்படுத்தும்.

மிக அதிக காற்று நிரப்பப்பட்ட டயர்களுடன் மோட்டர் சைக்கிள் ஓட்டம் கடுமையாக இருக்கும், நிலப்பரப்பு அபாயங்களால் வாகனத்திற்கு சேதம் ஏற்படும், தேய்மானமும் சீராக இருக்காது.

ஒவ்வொரு பயணத்தை மேற்கொள்ளும் முன்னர் நீங்கள் உங்கள் டயர்களை பார்வையால் சோதிக்க வேண்டும், ஒரு கருவியைக் கொண்டு ஏர் பிரெஷரை மாதத்திற்கு ஒரு முறையாவது சோதிக்க வேண்டும் அல்லது டயர் பிரெஷர் குறைந்திருக்கிறது என்று தோன்றும் போது சோதித்துக்கொள்ள வேண்டும்.

டியூப்லெஸ் டயர்கள் ஒருவேளை பங்க்சர் ஆனால் அவை தானாகவே ஒட்டிக்கொள்ளும் குணமுள்ளவை. இருந்தாலும், கசிவுகள் மிகவும் மெதுவாக இருக்கும் என்பதால், டயர்கள் முழுவதும் ஊதி பெருக்கப்படத போது அவைகளில் ஏதாவது பங்க்சர் உள்ளனவா என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும்.

உங்கள் டயர்கள் "கோல்ட்" ஆக இருக்கும் போது ஏர் பிரெஷரை சோதிக்க வேண்டும்- அதாவது குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு வாகனம் பார்க் செய்யப் பட்டிருக்கும் போது. உங்கள் டயர்கள் "வார்ம்" ஆக இருக்கும் போது - மோட்டார் சைக்கிள் ஒரு சில கிலோ மீட்டர் தூரம் பயணித்திருந்தாலும் - "கோல்ட்" ரீடிங்கை விட "வார்ம்" ரீடிங் அதிகமாகக் காட்டும். இது இயல்புதான் என்பதால், பரிந்துரைக்கப்பட்ட "கோல்ட்" ஏர் பிரெஷர் அளவை எட்ட டயரிலிருந்து காற்றை வெளிப்படுத்திவிடக் கூடாது. இதை நீங்கள் செய்தால், டயரில் காற்று குறைவாக ஆகிவிடும்.

கவனிக்கவும்

மிக அதிகம் / குறைந்த காற்று நிரப்புவது வாகன செயல்திறனை பாதிக்கும்.

பரிசோதனைகள்

நீங்கள் டயர் பிரெஷரை சோதித்துக்கொள்ளும் போதெல்லாம், டயர் மிதி அழுத்தத்தையும் சோதிக்க வேண்டும், பக்கச் சுவர்களில் ஏதாவது தேய்மானம் உள்ளதா, வெளிப் பொருள்களால் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

இவைகளைப் பாருங்கள் :

 • டயர் பக்கவாட்டில் மற்றும் அழுத்தும் பகுதிகளில் உப்பல் அல்லது வீக்கம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். டயர்களில் உப்பல் அல்லது வீக்கம் இருந்தால், டயர்களை மாற்ற வேண்டி இருக்கும்.
 • டயர்களில் வெட்டுக் காயம், பிளவு அல்லது வெடிப்பு. டயரில் துணி அல்லது கம்பி தெரிய வந்தால், டயரை மாற்றுங்கள்
 • அழுந்தும் பகுதியில் மிக அதிக தேய்மானம்

மோட்டார் சைக்கிள் ஒரு பள்ளத்தில் இறங்கி ஏறியிருந்தால் அல்லது கடின பொருளில் மோதிவிட்டால், டயர்களை கவனமாகச் சோதிக்க வேண்டும்.

அழுத்தும் பகுதியில் தேய்மானம்

டயர்கள் மீது தேய்மான அறிகுறிகள் தெரிய வந்ததும், அந்த டயரை மாற்றிவிட வேண்டும். டிரெட் வியர் இண்டிகேட்டரைப் பார்த்து டயர் தேய்மானத்தை தெரிந்து கொள்ளலாம்.

யூனிடைரெக்ஷனல் டயர்கள்

வீல் முன் சுழலும் திசை நோக்கியே டயரிலுள்ள அம்புக் குறியும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு சமயம் பங்க்சர் ஏற்படும் போதெல்லாம் டயரைக் கழற்றி மாட்டும் போது இதை கவனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை
 • மிக அதிக தேய்மானமடைந்த டயர்கள் அபாயமானவை, வாகன இழுவையையும், வாகனத்தை கையாள்வதையும் மிக மோசமாகப் பாதிக்கும்.
 • டயரில் குறைந்த காற்று இருந்தால் டயர் ஸ்லிப் ஆவதற்கு அல்லது ரிம்மிலிருந்து டயர் கழன்று கொள்வதற்கு ஏதுவாகும்.
 • இந்த ஓனர் மேனுவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட டயர் சைஸ் மற்றும் வகையையே எப்பொழுதும் பயன்படுத்துங்கள்.
கவனிக்கவும்

டயர்களை ரிப்பேர் செய்ய அல்லது மாற்ற, அங்கீகாரம் பெற்ற உங்கள் ஹீரோ மோடோகார்ப் பணிமனைக்கே செல்லுங்கள்.

முக்கிய பாதுகாப்பு நினைவூட்டல்கள்
 • இந்த மோட்டார் சைக்கிளில் டியூப்லெஸ் டயர்களுக்கு டியூப் மாட்டக் கூடாது. வெப்பம் மிகவும் அதிகரித்திருந்தால், டியூப் வெடித்துவிடலாம்.
 • இந்த மோட்டார் சைக்கிளில் எப்பொழுதும் டியூப்லெஸ் டயரையே பயன்படுத்துங்கள். இதன் ரிம்கள் டியூப்லெஸ் டயர்களுக்கு வடிவமைக்கப்பட்டவை, கடினமாக வேகம் அல்லது பிரேக் சமயங்களில், டியூட் வகை டயர்கள் ரிம்மிலிருந்து வழுக்கி விடலாம், டயர் காற்றை விரைவாக வெளியேற்றிவிடலாம்.

பங்க்சரையும் தாங்கிக் கொள்ளும் டியூப்

பங்க்சரையும் தாங்கிக் கொள்ளும் டியூப் ஒரு ஜெனூயின் பாகம், உங்கள் இந்த வகை ஸ்கூட்டருக்கென்றே தயாரிக்கப்பட்டுள்ளன.

தனிச்சிறப்புகள்

"பங்க்சரையும் தாங்கிக் கொள்ளும் டியூப்" கட்டுமான படங்களை இங்கே பாருங்கள். இதில் ஒரு சிறப்பு திரவம் நிரப்பப்பட்ட "ஃபுளூயிட் சேம்பர்" தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் பக்கத்தில், படத்தில் காட்டியுள்ளது போல், பொருத்தப் பட்டுள்ளது. ஒருவேளை கூரான ஆணி போன்ற ஏதாவது பொருள் டயரைத் துளைத்துவிடும் போது, அழுத்தம் காரணமாக திரவம் அங்கே தள்ளப்படும், திரவத்திலுள்ள நார்பொருள் துளையை நிரப்பும். இது போல, "பங்க்சரையும் தாங்கிக்கொள்ளும் டியூட்" காற்று கசிவைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவனிக்கவும்

ஒவ்வொரு பங்க்சர் சேதத்தையும் பங்க்சரை தாங்கிக் கொள்ளும் டியூப் சரி செய்து கொள்ள முடியாது. பங்க்சரை தாங்கிக்கொள்ளும் டியூப் பொருத்தப்பட்ட இந்த ஸ்கூட்டரில் உண்மையான டயரைப் பயன்படுத்தவும். பங்க்சரைத் தாங்கிக்கொள்ளும் டியூப் ஒவ்வொரு சைஸிலும் கிடைக்கின்றன, ஒவ்வொரு வகை டயர்களுக்கும் அவற்றில் பொருந்தும் வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். டயருக்குப் பொருந்தாத டியூபை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது.

ஒரு கூரான பொருள் டயரில் துளை போடுவதை எதிர்த்து காற்று கசிவை தடை செய்யும் விதத்தில் பங்க்சரைத் தாங்கிக் கொள்ளும் டியூப் வடிவமைக்கப்பட்டுள்ளது. டயர் பிரெஷர் இயல்பு நிலையில் இருப்பதாக தெரிய வந்திருக்கும் போது கூட டயரில் ஏதோ ஒரு வெளிப் பொருள் மாட்டிக் கொண்டிருக்கக் கூடும். தினசரி பரிசோதனையின் போது இந்த வெளிப்பொருளை டயரிலிருந்து கூடிய சீக்கிரத்தில் வெளியில் எடுத்துவிட வேண்டும், டயரையும் சீக்கிரம் ரிப்பேர் செய்துகொள்ள வேண்டும்.

ரிம் அல்லது டயர் திரவத்தால் ஈரமடைந்திருக்கும் போது அல்லது டயர் பிரெஷர் குறைந்திருக்கும் போது, டயரில் ஏதாவது வெளிப்பொருள் ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். டியூபை விரைந்து ரிப்பேர் செய்துவிட வேண்டும்.

டயரிலிருந்து வெளிப்பொருளை அகற்றும் போது டியூப் திரவம் கசியலாம். இந்த திரவம் சருமத்தில் படாமல் கவனமாக இருங்கள்.

3 மிமீ சைஸ் உள்ள சேதங்களை ரிப்பேர் செய்துவிட முடியும். 3 மிமீ சைஸுக்கும் கூடுதலாக சேதம் என்றால் டியூபை மாற்றிவிடுங்கள்.

டயரை மாற்றும் போது, அதே அளவு புதிய டியூபைப் தேர்ந்தெடுங்கள்.

குறிப்பிட்ட ஏர் பிரெஷர் உள்ள டியூபை பயன்படுத்துங்கள்.

ரிப்பேர் செய்வதற்கு முன் அல்லது பின்னர் பங்க்சரை சோதிக்க, டயர் உள் விட்ட அளவு டியூபை ஊதி பெரிதாக்க வேண்டும் (அதாவது, டயரின் உள்ளே டியூப் எவ்வளவு பெரிதாகுமோ அந்த அளவு). திரவம் இருக்கும் பக்கம் என்றால், சேம்பரிலிருந்து திரவக் கசிவிலிருந்து இதை தெரிந்து கொள்ளலாம், மிக அதிகமாக ஊதி பெரிதாக்கும் போது திரவ சேம்பரில் காற்று நுழைந்து, பங்க்சர் செயல்பாடுகளை கெடுத்துவிடும். (திரவப் பொருள்: ஆன்டி ஃபிரீஜ் மிக்ஸ்சர், ஃபைபர் ஆகியவை)

கவனிக்கவும்

ஒருவேளை திரவம் உங்கள் சருமத்தின் மீது பட்டுவிட்டால், தண்ணீரைப் பயன்படுத்தி அதை சுத்தமாக துடைத்து எடுத்துவிடுங்கள் உங்கள் கண்களில் பட்டுவிட்டால், தாமதிக்காமல் மருத்துவ உதவியைப் பெற வேண்டும்.

பங்க்சரை தாங்கிக்கொள்ளும் டியூபில் சரி செய்யவியலாத சேதங்கள்:

(1) வெடித்தல்

(2)கிரவுண்டிங் பரப்பை தவிர்த்த டயர் சேதங்கள் (உதாரணத்திற்கு, ரிம், டயர் பக்கச் சுவர்கள் போன்றவை, இவைகளில் திரவ சேம்பர்கள் இல்லை)

(3) துரு பிடித்த ஆணி போன்றவைகளால் சேதம் ஏற்படுவது.

(4) பெரிய அல்லது L- வடிவ சேதம்.

(5) மேலே சொல்லப்பட்ட எச்சரிக்கையை அலட்சியம் செய்ததால் விளைந்த சேதங்கள்

 • மோசடி நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்
 • மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்
 • அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணமில்லாத எண். : 1800 266 0018